தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலிவு விலை குடிநீர் திட்டம்: அமைச்சர் திறந்துவைத்தார்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீர் திட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கிவைத்தார்.

அமைச்சர்
அமைச்சர்

By

Published : Feb 25, 2020, 6:42 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி காந்திநகரில் ஊராட்சி ஒன்றியக்குழு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீர் திட்டத்தை சுறறுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து 5 ரூபாய் காயினை இயந்திரத்தில் செலுத்தி பொதுமக்களுக்கு சுத்திகரிகப்பட்ட குடிநீரை விநியோகித்தார்.

அதனைத் தொடர்ந்து கவுந்தப்பாடி பகுதியில் இரண்டு சாலை மேம்பாட்டு பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார். அதன்பின்னர் கவுந்தப்பாடிபுதூர் மற்றும் வேலம்பாளையம் ஆகிய இரு கிராமங்களில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

அமைச்சர் கருப்பணன்

மேலும், கவுந்தப்பாடி அரசு போக்குவரத்து கழக பணிமனையின் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று 75 பெண்களுக்கு சேலைகள் வழங்கியும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details