ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு முட்டை விநியோகிக்கப்படுகிறது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் தேவையான முட்டைகளை ஒப்படைத்து வாகனங்கள் மூலம் அனுப்பிவைத்தார்.
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 2 லட்சம் முட்டைகளை விநியோகம் செய்த செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கரோனா தொற்றின் தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.