தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்திய உற்பத்தி தொழிலில் 43% தமிழக பெண்கள்.. இதற்கு தமிழக அரசே காரணம்" - அமைச்சர் சி.வி.கணேசன்!

இந்திய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களில், 43 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதற்கு, தமிழக அரசு மகளீருக்கு வழங்கியுள்ள திட்டங்கள் தான் காரணம் என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Erode
Erode

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 10:56 PM IST

இந்திய உற்பத்தி தொழிலில் 43% தமிழக பெண்கள்.. இதற்கு தமிழக அரசே காரணம் - அமைச்சர் சி.வி.கணேசன்!

ஈரோடு: சென்னிமலை அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்று (டிச. 2) தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாம் முதன்மை கல்வி அலுவலர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேன்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது "தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும், கல்வி மற்றும் மருத்துவத்துறை தான் இரு கண்களாக பார்ப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அந்த வகையில் தான், அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தினார். மேலும், இந்திய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களில், 43 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு குறிபிட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது போன்ற திட்டங்களை செயல்படுத்தி இருப்பது தான்" என்றார்.

இதையடுத்து சாரண சாரணியர்களுக்கு சான்றிழ்களை வழங்கிய அமைச்சர் கணேசன், முகாமில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தனியார் கல்லூரியின் சேர்மேன் மக்கள் ராஜன், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் பெல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மழைக் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள்! ஒரே தீர்வு - இந்த 7 டிப்ஸா ஃபாலோ பண்ணுங்க!

ABOUT THE AUTHOR

...view details