ஈரோடு : மாவட்டம் நசியனூர் அடுத்த தயிர்பாளையத்தில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில்:ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரையில் இரண்டு முக்கிமான நோக்கத்தை கொண்டு உள்ளது. அதில் முதலாவது ஆண்டு முழுவதும் விவசாய மக்களுக்கு சீரான முறையில் ,அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், இராண்டாவது தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு குறைவான விலையில் பால் கொடுப்பதாகும்.
தற்போது ஆவினில் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் பால் வழங்கும் இடத்திலேயே தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து கொடுப்பதை உறுதி செய்து வருகிறோம்.தற்போது 40 சதவீதம் இடங்களில் இதற்கான பணிகள் நிறைவு பெற்று வருகிறது. மீதம் உள்ள இடங்களில் அதற்காக கருவிகள் வங்கப்பெற்று பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து சித்தோடு ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ஆவினில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் இது நல்ல பலனை தந்து இருக்கிறது.