தமிழ்நாட்டில் பணிபுரிந்த வடமாநிலத்தவர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதற்காக கூட்டமின்றி செல்வதற்கான தடுப்புகள் கொண்ட வழிப்பாதை, பரிசோதனை செய்வதற்கான சிறப்பு இடம், தொழிலாளர் குடும்பங்கள், பெயர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்யும் இடம் என அனைத்தையும் அரசு தயார்படுத்தியுள்ளது.
மேலும் வெளிமாநிலத்திற்கு செல்பவர்கள் எவ்வித தொந்தரவுமின்றி நிம்மதியாக செல்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்திருக்க வேண்டும் என்றும், அவர்களை கடைசி நேரத்தில் பயமுறுத்தக் கூடிய எவ்வித செயலையும் எந்த அலுவலர்களும் மேற்கொள்ளக் கூடாது என அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று பதிவு செய்திருந்தனர். இவர்களில் தற்போது 1,425 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி ரயில்வே ஜங்சனிலிருந்து பிகார் மாநிலம் மோதிகாரி ரயில் நிலையத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு ரயிலில் செல்லுமளவிற்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கை இருப்பதால், நேற்றிரவு உத்தரப் பிரதேசத்திற்கு செல்லும் சிறப்பு ரயில் மூலம் 1400 வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஏற்றுமதி வாய்ப்புகள், வியாபாரம் துவங்குதல் குறித்து இணையவழி கருத்தரங்கு, பயிற்சி வகுப்பு - தமிழக அரசு