தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மேட்டூர் சாலை ஒரு வழிப்பாதை ஆனதால் வியாபாரம் இல்லை' - திண்டாடும் சிறு வியாபாரிகள் - Mettur Road news

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் உள்ள மேட்டூர் சாலையை இருவழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேட்டூர் சாலை சிறு வியாபாரிகள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

erode
erode

By

Published : Oct 5, 2020, 8:17 PM IST

ஈரோடு:மாநகராட்சி பகுதியில் மேட்டூர் சாலை மிக முக்கிய போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. இங்கு சாலையின் இருபுறமும் 300க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளன.

மேலும், இந்த சாலை வழியாக தான் அரசு மருத்துவமனைக்கு வாகனங்கள் ஆம்புலன்ஸ்கள் சென்று வருகின்றன. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட காவல் துறையின் சார்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மேட்டூர் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

அதாவது, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலிருந்து வரும் வாகனங்கள் மட்டும் மேட்டூர் சாலை வழியாக தற்போது சென்று வருகிறது. அதேநேரத்தில், சத்தி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் சாலைக்கு பதிலாக, ஈரோடு நாச்சியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் நாச்சியப்பா வீதியிலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளது.

மாநகரின் மாற்று சாலையில் முனிசிபல் காலனி, இடையன்காட்டுவலசு பகுதி மக்கள் மேட்டூர் சாலையை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (அக்.05) மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மேட்டூர் சாலையில் உள்ள சிறு வியாபாரிகள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், மேட்டூர் சாலையில் சிறு வியாபாரம் செய்து எங்கள் குடும்பத்தை நடத்தி வந்த நாங்கள், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஒரு வழிப்பாதையாக காவல் துறை மாற்றியதன் விளைவாக, சாலையில் பொதுமக்கள் வருகை இல்லாததால் வியாபாரம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஏற்கனவே கரோனா காரணமாக எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாங்கள், இந்த ஒரு வழிப்பாதை அறிவிப்பால் மிகவும் சிரமப்பட்டு உள்ளோம். எனவே பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாழ்வாதாரத்தை மீட்க உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:20 ஆண்டுகளாக முறையான கழிவுநீர் கால்வாய், சாலை வசதி இல்லை: தி.மலையில் மக்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details