ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் சாலையின் வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 24) வழக்கமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீன் வலையில் கனமான பொருள் சிக்கியது. பின் வலையை மேலே தூக்கிப் பிரித்து பார்த்தபோது வெள்ளி முலாம் பூசிய கிருஷ்ணர் சிலை இருப்பது தெரியவந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள் சிலை அங்கிருந்து மீட்டு சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவிசங்கரிடம் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து அதனை ஆய்வுசெய்தபோது 4.60 கிலோ எடை கொண்ட சாதாரண உலோகத்தல் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை என்பதும், புராண காலத்துக்கு சிலை இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
மேலும் வீட்டில் வைத்து பூஜிக்கப்பட்ட சிலையை எவரேனும் வாய்க்காலில் வீசியெறிந்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிலை தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் ரவிசங்கர் தெரிவித்தனர்.