தமிழாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள குட்டைமுனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடாசலத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதன்கிழமை (ஏப்.21) அவரது குடும்பத்தினருக்கு சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை செய்ததில் மனைவி, மருமகள், பேரன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, சுகாதார துறையினர் அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்தும், தடுப்பு வைத்தும், மருத்துவ முகாம் மேற்கொண்டும் வருகின்றனர். இதற்கிடையே கரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்காக அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் தாமாக முன் வந்து கடைகளை அடைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா எதிரொலி: தாமாக முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்! - erode district news
ஈரோடு : கரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்காக அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் தாமாக முன் வந்து கடைகளை அடைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
erode corona update
இதையும் படிங்க: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை!