தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேகத்தடை அமைக்கக்கோரி வியாபாரிகள் சாலை மறியல்! - வேகத்தடை அமைக்கக்கோரி வியாபாரிகள் சாலை மறியல்

ஈரோடு: அகில்மேடு அருகே வேகத்தடை அமைக்கக் கோரி, வியாபாரிகள் திடீர் சாலை மறியில் ஈடுபட்டனர்.

merchants-protest
merchants-protest

By

Published : Dec 19, 2019, 4:01 PM IST

ஈரோடு மாவட்டம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் அகில்மேடு பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிக்காக குழி தோண்டி பல மாதமாகியும் சீரமைக்கவில்லை. மேலும் ஏற்கனவே இருந்த வேகத்தடை அகற்றப்பட்டதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இவ்வழியில் வேகமாக வரும் வாகனங்களால், பள்ளி குழந்தைகள் அச்சமடைகின்றனர்.

இப்பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரி மாநகராட்சி அலுவலர்களிடம் தொடர்ந்து மூன்று மாதமாக மனு அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் இன்று காலை பள்ளி மாணவன் ஒருவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வியாபாரிகள் வேகத்தடை அமைக்ககோரி தீடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேகத்தடை அமைக்கக்கோரி வியாபாரிகள் சாலை மறியல்

இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சீமானுக்கு டஃப் கொடுக்குறீங்க நித்தி - செந்தில் குமார் எம்.பி., கலாய்!

ABOUT THE AUTHOR

...view details