ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரியும், வணிகர்கள் அரசுக்கு அனைத்து வகைகளிலும் உறுதுணையாக இருப்பதாகவும் அதனால் அவர்களுக்கு சேவகர் என்ற பட்டம் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம்: வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் - erode protest
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரி மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மொடச்சூர் கரட்டடிபாளையம் நாயக்கன்காடு புதுப்பாளையம் கரட்டூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் செயல்படும் துணிக்கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகள், உணவகங்கள், பேக்கரி உள்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கரோனா நோய் தொற்றினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளபோதும் வணிகர்கள் கரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கையில் அரசுக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு நலப்பணிகளை ஆற்றிவந்ததாகவும், சாத்தான்குளம் சம்பவம் மன வேதனை அளிப்பதாகவும் அதனால் வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.