தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீன பட்டாசு விற்க வணிகர் சங்கம் எதிர்ப்பு: விக்கிரமராஜா - vikrama raja

ஈரோடு: வருகின்ற 8ஆம் தேதி சென்னையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சீனப்பட்டாசுகள் வரவை தடுக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

விக்கிரமராஜா
விக்கிரமராஜா

By

Published : Nov 3, 2020, 6:44 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூரில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு வணிகர் சங்க கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விக்ரமராஜா கூறுகையில், " வருகின்ற 8ஆம் தேதி சென்னையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சீனப்பட்டாசுகள் வரவை தடுக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். பண்டிகை காலங்களில் கடைகளில் கரோனா ஆய்வு என்ற பெயரில் அபராதம் விதிப்பதை தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

வேளாண் சட்டத்தால் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலிருந்து நீக்கிப்பட்டு உள்ளதால் இதன் விலை உயர வாய்ப்பு உள்ளது. தேவைப்பட்டால் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராடும். அதுமட்டுமல்லாமல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்களை ஒன்று திரட்டி டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டம் மாநாடு நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details