தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாமி தரிசனம் செய்யும்போதுகூட ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் காணப்படுவதால் கட்டணமின்றி வழிபாடு செய்ய இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலய தரிசன கட்டண உயர்வை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் - Hindu munnani
ஈரோடு: ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு, நாகை ஆகிய இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
hindu munnani
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் தாளவாடி பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் 50க்கும் மேட்பட்ட இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர். இதில் இந்து கோயில்களில் ஆலய தரிசனம் செய்ய கட்டணம் வசூல் செய்யும் மாநில அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு இந்து முன்னணி நகர தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.