தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடம்பூர் அருகே வாய்ப்புண் காரணமாக சாப்பிட முடியாமல் தவிக்கும் குட்டி யானைக்கு சிகிச்சை!

Kadambur: கடம்பூர் அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட குட்டி யானைக்கு வனத்துறை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கடம்பூர் அருகே வாய்ப்புண் காரணமாக சாப்பிட முடியாமல் தவிக்கும் குட்டி யானைக்கு மருத்துவக் குழு சிகிச்சை!
கடம்பூர் அருகே வாய்ப்புண் காரணமாக சாப்பிட முடியாமல் தவிக்கும் குட்டி யானைக்கு மருத்துவக் குழு சிகிச்சை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 11:59 AM IST

கடம்பூர் அருகே வாய்ப்புண் காரணமாக சாப்பிட முடியாமல் தவிக்கும் குட்டி யானைக்கு மருத்துவக் குழு சிகிச்சை!

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் இருந்து வெளியேறிய 3 வயதுள்ள குட்டி யானை, கருவளையம் கிராமத்தில் உலா வருகிறது. மேலும், அந்த குட்டி யானை உணவு ஏதும் உண்ணாமல் சோர்வுடன் காணப்படுகிறது. குட்டி யானைக்கு வாய்ப்புண் இருப்பதால், அதனால் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறது.

கருவளையம் பகுதியில் தங்கவேல் என்பவரது தோட்டத்தில் முகாமிட்டுள்ள இந்த குட்டி யானை, தென்னை மரத்தைச் சுற்றி வருகிறது. இவ்வாறு யானை மிகவும் சோர்வுடன் காணப்படுவதைப் பார்த்த வனத்துறையினர், அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றினர். அதனைப் பார்த்த யானை, தண்ணீர் தொட்டியில் நீர் அருந்தி தாகத்தை தணித்துக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து, உடல்நலக் குறைவால் திரியும் குட்டி யானைக்கு, டாக்டர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் பழங்கள் மூலம் மருந்து செலுத்தி, யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து யானையின் உடலை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். குட்டி யானை கிராமப்புற எல்லையில் உலாவுவதால், மக்கள் அதனை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கடம்பூர் மலைப்பகுதி சாலையில் அதிகரிக்கும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details