தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்! - Marriage is a reminder of culture

ஈரோடு : திருமணம் முடித்த பின் புதுமணத் தம்பதி ஒன்று, மாட்டுவண்டியில் பயணம் செய்து பெண் வீட்டுக்குச் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Marriage is a reminder of culture
Marriage is a reminder of culture

By

Published : Dec 9, 2019, 10:11 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் திருமணமண்டபத்தில் நடைபெற்ற பட்டதாரி மணமக்களின் திருமணத்தில் பாரம்பரிய முறையிலும் கலாச்சாரத்தை நினைவுக்கூறும் விதமாகவும் மணமக்கள் பெண் வீடு வரை மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு அசத்தினர்.

எட்டப்பாடி ஆவணியூர் மேல்முகம் ஜெயக்குமார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள போடிச்சின்னாம்பாளையம் வீரப்பகவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த வைணவி. இளங்கலை ஐ.டி படித்துள்ள இவர் அரசு பணித்தேர்வுக்கு தயாராகிவருகிறார்.

மணமக்கள் பெண் வீடு வரை மாட்டு வண்டியில் பயணம்

இவர்கள் இருவருக்கும் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் திருமணமண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் முடிந்தபின் மணமக்களை பெண் வீட்டிற்கு அலங்காரம் செய்யப்பட்ட மாட்டு வண்டியில் அழைத்துச்சென்றனர். சொந்த பந்தங்கள் படைசூழ மாட்டு வண்டியில் சென்ற மணமக்களை வழிநெடுகிலும் உள்ள கிராம பொதுமக்கள் பார்த்து வியப்படைந்தனர்.

புதுமணத்தம்பதி இதுகுறித்து கூறும்போது

மணமக்களை அழைத்துச் செல்ல அலங்காரம் செய்யப்பட்ட சொகுசு வாகனங்களை பயன்படுத்திவரும் காலத்தில் மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றது சாலையில் செல்வோரின் கண்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க:

மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் ஹாக்கி போட்டியில் ஈரோடு அணி வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details