தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு மார்க்கெட் நிலவரம்: மஞ்சள் குவிண்டால் 300 ரூபாய் குறைந்தது - மார்க்கெட் நிலவரம்

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள் வரத்து அதிகமாக இருந்ததால் குவிண்டால் 300 ரூபாய் குறைந்துள்ளது.

மார்க்கெட் நிலவரம் மஞ்சள் குவுண்டால் 300 ரூபாய் குறைந்தது
மார்க்கெட் நிலவரம் மஞ்சள் குவுண்டால் 300 ரூபாய் குறைந்தது

By

Published : May 3, 2022, 4:52 PM IST

ஈரோடு:ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் வாரத்தின் முதல் நாளான நேற்று சுமார் 2374 மஞ்சள் மூட்டைகள் ஏல விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

விராலி மஞ்சள் அதிகப்பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு 7,956 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக 6055 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கிழங்கு மஞ்சள் ஒன்றுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 6,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்ச விலையாக 5,939 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வாரத்தைக்காட்டிலும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 விலை குறைந்து மஞ்சள் ஏலம் சென்றுள்ளதால் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. இருப்பினும், மஞ்சளின் தேவை நிலவுவதால் மஞ்சள் வணிகத்தில் விலை ஏற்றங்கள் வரும் நாட்களில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியவில்லையா : இதை செய்தாலும் புண்ணியம் தான்...

ABOUT THE AUTHOR

...view details