ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 72 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடைப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் தொகை அடைப்படையில் 15 வருடங்களாக வேலைப் பார்த்து வரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வருகைப் பதிவில் துப்புரவு பணியாளர்கள் நான்கு முறை கையெழுத்திடும் வழக்கத்தை மாற்றிட வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு 5ஆம் தேதியே சம்பளம் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் துப்புரவு தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
துப்புரவு பணியாளர்களுக்கு 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கவேண்டும்! - erode corporation commissioner
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடன் துப்புரவு பணியாளர்கள் மனு அளித்தனர்.
erode
மேலும் துப்புரவு பணியாளர்கள் இறக்க நேரிடும்போது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுப்பு வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.