ஈரோடு: 'சினேகம் வீடு பவுண்டேசன்' என்ற தன்னார்வ அமைப்பு, ஈரோடு வாழ் கேரள மக்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த் அமைப்பின் சார்பில் 'மனைவி நல வேட்பு நிகழ்ச்சி' நடைபெற்றது.
இதில், திருமணமாகி 25 ஆண்டுகளை கடத்த 30 ஜோடிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருமண நாளைப்போல ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனர். மேலும், பிள்ளைகள், பேரன், பேத்திகளுடன் மணக்கோலத்தில் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.