தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் சிலைக்கு காவி சாயம்; இந்து மக்கள் கட்சி தொண்டரை அலேக்காக தூக்கிய போலீஸ்! - Periyar statue in erode

ஈரோடு: பெரியார் சிலைக்கு காவி சாயம் பூச முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவரைக் காவல் துறையினர் தடுத்துநிறுத்தி கைதுசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பெரியார் சிலை  ஈரோடு பெரியார் சிலைக்கு காவி சாயம் பூச முயற்சி  erode news  erode periyar statue issue  Periyar statue in erode  saffron paint on Periyar statue
பெரியார் சிலைக்கு காவி சாயம் பூச முயற்சித்தவர் கைது

By

Published : Jul 20, 2020, 1:47 PM IST

கந்தசஷ்டி கவசம் குறித்து சர்சைக்குரிய வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டது. இதற்குப் பல்வேறு இந்து அமைப்பினர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் அந்த யூடியூப் சேனலைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரியார் சிலைக்குப் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இன்று கறுப்பர் கூட்டத்தைக் கண்டிக்கும் வகையில் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் காவி சாயம் பூச முயற்சி செய்தார்.

பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூச முயன்றவர்

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி பெயிண்டை ஊற்றிய சமூக விரோதிகள்!

ABOUT THE AUTHOR

...view details