தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என்னைக் காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்' - பெண்ணை கத்தியைக்காட்டி மிரட்டிய இளைஞர்! - men therataning girl with knife

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே காதலிக்க மறுத்ததால் பெண்ணை கத்தியைக்காட்டி மிரட்டிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

girl

By

Published : Oct 23, 2019, 3:54 PM IST

சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்ற பெண்ணை இரண்டு ஆண்டுக்கு முன்பு காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பிலிருந்து ஜனனி சிவக்குமாருடன் சரிவரப் பேசாமல் விலகி இருந்துள்ளார். சிவக்குமார் அவ்வப்போது ஜனனியை சந்தித்து, 'ஏன் என்னுடன் பேசாமல் காதலிக்க மறுக்கிறாய்?' எனக் கேட்டுத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பதில் ஏதும் கூறாமல் ஜனனி சிவக்குமாரை தவிர்த்தே வந்துள்ளார்.

பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞர்

இந்நிலையில், இன்று காலை சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில் உள்ள குளத்துப்பிரிவு என்ற பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றிருந்த ஜனனியை சிவக்குமார் கத்தியைக்காட்டி மிரட்டி, 'என்னைக் காதலிக்காவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்' என மிரட்டியுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் காவல் துறையினர் சிவக்குமாரை சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: இளம்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியவர் உள்பட 7 பேர் மீது போக்சோ...
!

ABOUT THE AUTHOR

...view details