ஈரோடு மாவட்டம் பவானி கீரைக்கார வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். முடி வெட்டும் தொழிலாளியான இவர், பணியை முடித்துவிட்டு மது போதையில் தன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பதினொரு வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது! - ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முடிவெட்டும் தொழிலாளி
ஈரோடு: பவானி அருகே வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்
arrest pocso
அப்போது சிறுமி கூச்சலிட பெற்றோரும் பொதுமக்களும் வேல்முருகனை பிடித்து அடித்து உதைத்தனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது புகாரளித்தனர். புகாரின்பேரில் காவல் துறையினர் வேல்முருகனை குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு! சிசிடிவி காட்சிகள்!