சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்துவந்ததாக அணில் நத்தத்தைச் சேர்ந்த நாகப்பன்(35) என்பவரை கடம்பூர் மவோயிஸ்ட் தனிப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவரிடமிருந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு கரோனா பாதிப்பால் காவல்துறையினருக்கு பரிசோதனை - கஞ்சா வழக்கு கைதிக்கு கரோனா
ஈரோடு: கடம்பூர் அருகே கஞ்சா வழக்கில் கைதான குற்றவாளிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரை கைது செய்த காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காவலர்களுக்கு கரோனா பரிசோதனை
நாகப்பனை கோபி சிறையில் அடைத்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குற்றவாளியை விசாரணை செய்த காவலர்கள் மற்றும் கைது செய்த காவலர்களுக்கு கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இருவர் கைது!
Last Updated : Sep 23, 2020, 11:45 AM IST