ஈரோடு: டி.என்.பாளையம் பகுதிகளில் நடந்த கால்நடைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கள்ளிப்பட்டி அருகே உள்ள தண்ணிர் பந்தல் என்ற இடத்தில் காவல்ததுறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பங்களாபதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர், ஆப்பக்கூடல் ஒரிச்சேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், அவர் ஆடுகள் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
பின்னர் சுரேஷை காவல் நிலையம் அழைத்து சென்ற காவலர்கள், அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்தனர். அதில் சுரேஷ் மீது அம்மாப்பேட்டை, கவுந்தப்பாடி, சிறுவலூர், அரச்சலூர், தொப்பூர், பங்களாபதூர் ஆகிய காவல்நிலையங்களில் கால்நடை திருட்டு வழக்கு பதிவாகி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: 6 பேர் கைது