தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் - காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Makkal Needhi Maiam party members joined in congress party  various party member joined in congress  new joining member in congress  காங்கிரஸ் கட்சியில் மற்று கட்சியினர் இணையும் விழா  காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்  காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்
மாற்று கட்சியினர் இணையும் விழா

By

Published : Dec 1, 2021, 2:11 PM IST

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நேற்று (நவ. 31) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா தலைமை வகித்தார்.

இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் பரணி மற்றும் அல்டிமேட் தினேஷ் தலைமையில் அக்கட்சியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மேலும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ பி ரவி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்.

இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுக் கட்சியில் இருந்து புதிதாக இணைந்த பரணி, அல்டிமேட் தினேஷ், சபீக் அலி, சுதா, ஜுபைர் அகமது, முகமது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜி செய்த மோசடிக்கு ஆதாரங்கள் உள்ளன - உயர் நீதிமன்றத்தில் காவல் துறை பதில்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details