ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர், கேர்மாளம், அருகியம், குரும்பூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியுள்ளனர். கடந்த மாதம் பெய்த மழையால் நிலத்தை உழுது 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது.
தற்போது பயிர் வளர்ந்து வரும் நிலையில் மழையில்லாமல் வாடுகிறது. 3 மாதப்பயிரான ராகி, மக்காச்சோளம் மழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகியம், குரும்பூர், கோம்பைத்தொட்டி கிராமமக்கள் மழை வேண்டியும் வாடும் பயிர்கள் செழித்து வளரவும் அருகியம் மாரியம்மனுக்கு சிறப்புப்பூஜை செய்து கோயிலில் ராகி கூழ் சமைத்தனர்.