ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை புகழ்பெற்றது. வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச் சந்தையில் ஈரோடு மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் தங்களது மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இங்கே விற்கப்படும் மாடுகள் நல்ல விலை உயர்ந்ததும் தரமானதாகவும் இருப்பதால், விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். வாரந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ரூ.5 முதல் ரூ.6 கோடி வரை விற்பனை நடைபெறும்.