தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தக்காளி மினி லாரி மீது ஏறிநின்ற டிராவலர் வேன்; போலீஸ் விசாரணை - erode district news

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் மினி லாரி மீது டிராவலர் வேன் மோதி விபத்திற்குள்ளானது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking News

By

Published : Feb 15, 2020, 11:32 PM IST

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் மைசூர் நோக்கி பயணிகளுடன் வந்த டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று, எதிர் திசையில் தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசானக் காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த தக்காளிகள் பெருமளவு சேதமாகின.

மினி லாரி மீது மோதி ட்ராவலர் ஏறி விபத்து

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்கள் - மூன்று கார்கள் மீது மோதி விபத்து!

ABOUT THE AUTHOR

...view details