ஈரோடு: கர்நாடக மாநிலம், குடகு மலையில் இருந்து சேலத்துக்கு மஞ்சுநாதன் என்பவர் லாரியில் மரக்கட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்றார்.
அவருடன் கிளீனர் சாகர் என்பவர் உடனிருந்தார். ஆசனூர் அருகே 'செம்மண்திட்டு' என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, லாரி நிலைதடுமாறி, பின் சக்கரம் மண்ணில் புதைந்தது. பாரம் தாங்காமல் சாய்ந்தபடி நின்றது.
இதையடுத்து சத்தியமங்கலத்தில் இருந்த கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்க முடிவு செய்தனர். இதற்கிடையில் லாரி ஓட்டுநர் மஞ்சுநாதன் லாரி மீது ஏறி மரக்கட்டுகளை அவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.