தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். இதையடுத்து பொள்ளாச்சி மலைப்பகுதியில் வேலை பார்த்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வேலையில்லாமல் தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து பொள்ளாச்சி வட்டாட்சியர் தனி லாரி மூலம் 72 பேரை கர்நாடகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
'மலைப்பாதையில் லாரி ஏறாது' எனக்கூறி பழங்குடியினரை பாதி வழியிலேயே இறக்கி விட்ட லாரி ஓட்டுநர் - lockdown
ஈரோடு: பொள்ளாச்சியில் இருந்து கர்நாடகத்துக்கு 72 பழங்குடியின மக்களை ஏற்றிச் சென்ற லாரி ஒட்டுநர், சத்தியமங்கலத்திலேயே இறக்கிவிட்டதால் செய்வதறியாது தவித்தவர்ளுக்குப் பொதுமக்கள் உணவு வழங்கிப் பசியாற்றினர்.
இந்த லாரி சத்தியமங்கலம் அருகே வந்தபோது திம்பம் மலைப்பாதையில் லாரி ஏறாது எனக்கூறி ஓட்டுநர் பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதில் 20 குழந்தைகளும் உள்ளனர். மொழி தெரியாத அவர்கள் யாரிடமும் உதவி கேட்காமல் சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகத்தில் சோர்வுடன் அமர்ந்துள்ளனர்.
அங்கிருந்த பொதுமக்கள், வேன் ஓட்டுநர்கள் அவர்களின் பரிதாப நிலையைக் கண்டு உணவளித்து உதவி செய்தனர். இரவில் அங்கேயே தங்கிய அவர்களுக்கு காலை அம்மா உணவகம் மூலம் சிற்றுண்டி வழங்கி தனி வாகனம் மூலம் கர்நாடகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வண்டலூர் பூங்காவைச் சுற்றிவரும் கரோனா; 2 சிங்கங்கள் கவலைக்கிடம்!