தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாக்கெட் சாராயம் கடத்திவந்த லாரி ஓட்டுநர் கைது! - மதுபானங்கள் கடத்தி வந்த லாரி ஓட்டுநர்கள் கைது

கர்நாடகாவிலிருந்து ஈரோட்டிற்கு லாரி மூலம் மது பாக்கெட்டுகளை கடத்திவந்த லாரி ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், கடத்திவரப்பட்ட மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மதுமானங்கள் கடத்தல்: லாரி ஓட்டுநர் கைது!
கர்நாடக மதுமானங்கள் கடத்தல்: லாரி ஓட்டுநர் கைது!

By

Published : Jun 11, 2021, 3:10 PM IST

ஈரோடு:தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியான ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று, அவ்வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனத்தை காவல் துறையினர் தடுத்து சோதனை செய்தனர்.

அப்போது, வாகனத்தில் 141 மதுபாக்கெட்டுகள் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஓட்டுநரை கைது செய்து, கடத்தி வரப்பட்ட மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:சம்மன் கொடுக்கச் சென்றவர் மீது சரமாரி தாக்குதல்.. செருப்பால் அடித்து சித்ரவதை..

ABOUT THE AUTHOR

...view details