ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி, திம்பம் வழியாக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் 30 பயணிகள் இருந்தனர்.
திம்பம் 26ஆவது வளைவு பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதன் மீது மோதியது.