தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு, பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் விழுந்த லாரி - erode lorry accident

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

lorry accident
lorry accident

By

Published : Jan 10, 2020, 9:25 AM IST

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து தேங்காய் மட்டையை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று காங்கேயம் செல்வதற்காக சத்தியமங்கலம் மைசூர் சாலையில் சென்றுக்கொண்டிருந்தது.

இந்த லாரி பண்ணாரி அருகே உள்ள புதுக்குய்யனூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து புதுக்குய்யனூர் பிரிவு அருகே உள்ள பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்தபடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் லாரி நேராக விழுந்ததால் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் விழுந்த லாரி

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்துள்ளதால், உடனடியாக இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்

ABOUT THE AUTHOR

...view details