ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது விவசாயிகள் மரவள்ளி கிழங்கை அறுவடை செய்து லாரிகள் மூலம் சேலம், தருமபுரி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
கடம்பூர் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு! - கடம்பூர் மலைப்பாதை
ஈரோடு: கடம்பூர் மலைப்பாதையில் மரவள்ளி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
![கடம்பூர் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3077820-thumbnail-3x2-lorry.jpg)
கடம்பூர் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!
இந்நிலையில், மரவள்ளி பாரம் ஏற்றிய லாரி, கடம்பூர் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்றுள்ளது. அப்போது லாரியின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனதால் லாரி கிழக்குப்புறமாக சாய்ந்தது. அதில் இருந்த மரவள்ளிக்கிழங்குகளும் சரிந்தன.
இதனால் கடம்பூர் சத்தியமங்கலம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.