தமிழ்நாடு

tamil nadu

இயந்திரம் ஏற்றிச் சென்ற லாரி திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

By

Published : Jan 3, 2020, 7:37 PM IST

ஈரோடு: கர்நாடகாவிலிருந்து பொக்லைன் இயந்திரம் ஏற்றி வந்த லாரி, திம்பம் மலைப்பாதையில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திம்பம் மலைப்பாதையில் இயந்திரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து  ஈரோடு மாவட்டச் செய்திகள்  திம்பம் மலைப்பாதையில் லாரி விபத்து  thimbam lorry accident  lorry accident in dhimbam mountain road
இயந்திரம் ஏற்றிச் சென்ற லாரி திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

தமிழ்நாடு கர்நாடகவை இணைக்கும் சாலையாக திம்பம் மலைப்பாதை திகழ்கிறது. இப்பாதையின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இம்மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இப்பகுதியில் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலிருந்து பொக்லைன் பாரம் ஏற்றிய லாரி ஒன்று கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையின் 19ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி, எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இயந்திரம் ஏற்றிச் சென்ற லாரி திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

இதில் லாரி ஓட்டுநர் ராஜா காயமின்றி உயிர் தப்பினார். பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர்.

இதையும் படிங்க: களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!

ABOUT THE AUTHOR

...view details