தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 28, 2022, 10:29 AM IST

Updated : Sep 1, 2022, 11:28 AM IST

ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் இரும்பு பாரம் ஏற்றிவந்த லாரி விபத்து

திம்பம் மலைப்பாதையில் இரும்பு பாரம் ஏற்றிவந்த லாரி பழுதாகி நின்றதால் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Lorry accident at thimbham mountain regions  Erode thimbam mountain  accident at thimbam mountain road  thimbam mountain  Lorry accident  திம்பம் மலைப்பாதை  லாரி விபத்து  திம்பம் மலைப்பாதையில் லாரி விபத்து  இரும்பு பாரம் ஏற்றிவந்த லாரி விபத்து  ஊசி வளைவு  போக்குவரத்து நெரிசல்  கொண்டை ஊசி வளைவு  லாரி பழுதால் விபத்து
திம்பம் மலைப்பாதையில் இரும்பு பாரம் ஏற்றிவந்த லாரி விபத்து: 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு:தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழ்நாடு - கர்நாடக இடையே முக்கியப் போக்குவரத்தாக உள்ள இந்தப் பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

லாரி பழுதால் விபத்து:இரவு நேரத்தில் சாலையைக் கடக்கும் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேரத் தடைவிதிக்கப்பட்டது.

இதனால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் தினம் தினம் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு நிலக்கரி பாரம் ஏற்றிவந்த லாரி திம்பம் மலைப்பாதை 27ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ஆக்சில் கட்டாகி பழுதாகி நின்றது.

அதனைத் தொடர்ந்து கர்நாடகத்திலிருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி 14ஆவது வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிய வாகனங்கள் சென்றுவந்தன. மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதனால் வாகனங்கள் அனைத்தும் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்திக்கு அணிவகுத்து நின்றன.

இதையும் படிங்க:மகா சிவராத்திரி: சத்குரு ஜக்கிக்கு நரேந்திர மோடி வாழ்த்து

Last Updated : Sep 1, 2022, 11:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details