தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் சிக்கிய லாரிகள் - போக்குவரத்து பாதிப்பு - Erode Thimbam Hills News

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் உள்ள 23ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்ற கரும்பு லாரி கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி

By

Published : Nov 10, 2019, 9:30 PM IST

கர்நாடக மாநிலம் மைசூருவிலிருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி 23ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதன்காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிரேன் மூலம் கவிழ்ந்த லாரியை போக்குவரத்து துறையினர் அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது.

கொண்டை ஊசி வளைவில் சிக்கிய லாரி

இதேபோல் கரும்பு பாரம் ஏற்றிவந்த மற்றொரு லாரி 26ஆவது கொண்டைஊசி வளைவில் திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகரமுடியாமல் நின்றதால் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த லாரியையும் போக்குவரத்துத் துறையினர் கிரேன் மூலம் அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பாரம் ஏற்றிச் செல்வதால் தான் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

கொண்டை ஊசி வளைவில் சிக்கியுள்ள லாரி

இதையும் படிங்க: அடுக்கம் - கொடைக்கானல் சாலையில் மண்சரிவு: சாலையை சீர்படுத்தும் பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details