ஈரோடு:சத்தியமங்கலத்தில் நகர அதிமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக விழா முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பாஜக, அமமுக தொண்டர்கள் 31 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
புதிய நகர தலைவராக பொறுப்பேற்ற ஓ. எம். சுப்பிரமணியத்துக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திமுகவினர் அவர்களது தலைவரை மக்களிடத்தில் நினைவுபடுத்துவது போல அதிமுகவினரும் நமது தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை நினைவு படுத்த வேண்டும் என்றார்.
புதிய பொறுப்பாளர்கள் அறிமுக விழாவில் முன்னாள் அமைச்சர் பேச்சு காலதாமதம் செய்ததால் உள்ளாட்சி தேர்தலை தோல்வி சந்திக்க நேர்ந்ததாக தெரிவித்த அவர், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடந்திருந்தால் அதிமுகவினர் தான் தலைவர் மற்றும் மேயராக இருந்திருப்பார்கள், என்றும் அதனை தவற விட்டு விட்டோம் எனவும் கூறினார்.
புதிய பொறுப்பாளர்கள் அறிமுக விழா இதற்கு ஆமை முயல் கதையை எடுத்துக்காட்டாக கூறி , முயல் (அதிமுக) சற்று வேகமாக ஓடி வெற்றி பெறுவோம் என இளைப்பாறியது; அந்த நேரத்தில் ஆமை (திமுக) மெதுவாக சென்று வெற்றி பெற்றது என்றார். மேலும் குகையில் இருக்கும் சிறுத்தையை தட்டிவிட்டால் என்ன ஆகும், அதே போல அதிமுக இளைஞர்கள் பட்டாளத்தை தட்டிவிட்டால் எந்த கட்சியும் நெருங்க முடியாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விடியா அரசின் நிர்வாக சீர்கேடு - எடப்பாடி பழனிசாமி ட்வீட்