கரோனா நோய்த் தொற்றை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ள அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள பலரும் பிற மாநிலங்களுக்குச் சென்று மது பாட்டில்களை வாங்கி வந்து விநியோகிப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன.
இதனையடுத்து தமிழ்நாடு - கர்நாடக எல்லையான சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள புளிஞ்சூரில், கர்நாடக மாநில மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.