தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு: கர்நாடகாவிலிருந்து மதுபானங்களை வாங்கிவரும் மதுப்பிரியர்கள் - latest news

கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை சில மதுப்பிரியர்கள் வாங்கி வந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

பொதுமுடக்கத்தின்போது கர்நாடகத்தில் மதுபானங்கள் கடைகள் திறப்பு
பொதுமுடக்கத்தின்போது கர்நாடகத்தில் மதுபானங்கள் கடைகள் திறப்பு

By

Published : May 24, 2021, 7:59 PM IST

ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. தற்போது, தமிழ்நாடு- கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மதுபான கடைகள் செயல்படுகின்றன.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து சில மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிவந்து தாளவாடி மலைப்பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்துவருகின்றனர். கார்நாடகவில் இருந்து இன்று மதுபானங்களை வாங்கிவந்த சிலரை தாளவாடியைச் சேர்ந்த இளைஞர்கள் பிடித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்தத்தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி ஆசிரியரின் சேட்டைகள் - போர்க்கொடி தூக்கிய முன்னாள் மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details