ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயியான இவர் வீட்டுக்கு அருகில் குடிசை கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார்.
இடி தாக்கி நூறாண்டு பழமையான புளியமரம் கருகியது
ஈரோடு: அந்தியூரில் இடி தாக்கியதில் நூறாண்டுகள் பழமையான புளிய மரம் கருகியது, அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்அந்தியூர் பகுதியில் இடிமின்னலுடன் கனமழை நேற்று பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ரங்கசாமி மாட்டுக் கொட்டகைக்கு அருகில் இருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. தென்னை மரத்தில் இருந்து தீப்பொறி மாட்டு கொட்டகை மீது விழுந்ததில் மாட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட ரங்கசாமி விரைவாக செயல்பட்டு மாட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த மாடுகளை பாதுகாப்பாக வெளியேற்றினார். இதுகுறித்து தகவல் கிடைத்து அந்தியூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மாட்டுக் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதில் மாட்டுக் கொட்டகைகள் வைக்கப்பட்டிருந்த விதை மஞ்சள், இருசக்கர வாகனம் மற்றும் விவசாய பொருட்கள் எரிந்து நாசமானதில் சுமார் ரூ.3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேபோல் அந்தியூர் புதுப்பாளையம் அடுத்த தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தின் மீது இடி தாக்கியதில் மரம் கருகியது. மேலும் கன்னியானூர் மேட்டூர் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் தென்னை மரங்களில் இடி விழுந்ததில் 3 தென்னை மரங்கள் நாசமாகியது. அந்தியூர் பகுதியில் ஒரே நாளில் நான்கு இடங்களில் தாக்கிய இடியால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.