ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள டெக்ஸ்வேலியில் வீவ்ஸ் தென்னிந்திய முதன்மை ஜவுளி கண்காட்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள், பின்னர் ஜவுளித்துறையில் சிறந்து விளங்கும் இளம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விருது வழங்கினர்.
டெக்ஸ்வேலியில் வீவ்ஸ் ஜவுளி கண்காட்சி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, 'உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. திமுக ஒருபுறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டு அதிமுகவை குறை சொல்வது அழகல்ல, வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு திமுக தேர்தலை சந்திக்கலாம்’ என்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்மகனா? தமிழ்ச்செல்வனா? மேடையில் குழம்பிய திண்டுக்கல் சீனிவாசன்!