ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் காவல் சுற்றில் நயினரப்பன்கரடு பகுதியில் வெள்ளியங்கிரி என்பவரது தோட்டத்தில் காவலுக்கு கட்டிவைத்திருந்த உயர் ரக நாயை சிறுத்தை கடித்து கொன்று அதே இடத்தில் சாப்பிட்டுள்ளது. மறுநாள் காலை இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த வெள்ளியங்கிரி, தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை கடித்து காவல் நாய் இறந்ததால் விவசாயிகள் அச்சம்! - கோபி அருகே காவல்நாயை அடித்துக் கொன்ற சிறுத்தை
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே நயினாரப்பன்கரட்டுத்தோட்டம் வெள்ளியங்கிரி என்பவரின் விவசாய தோட்டத்தில் கட்டியிருந்த உயர்ரக காவல் நாயையும் பக்கத்து தோட்டத்திலிருந்த இரண்டு வெள்ளாடுகளையும் சிறுத்தை கடித்து கொன்றுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நாயை கடித்துக்கொன்றது சிறுத்தை தான் என்பதை உறுதி செய்து அது வந்த பாதையை கால்தடங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் வெள்ளியங்கிரி தோட்டத்திற்கு அருகில் உள்ள பெருமாள் என்ற விவசாயின் தோட்டத்திலிருந்த வெள்ளாட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை இரண்டு வெள்ளாடுகளைக் கடித்துக்கொன்றுள்ளது. அதனையும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி விவசாய தோட்டங்களுக்குள் புகும் சிறுத்தை வெள்ளாடு, நாய்களை கொன்று வருவதாகவும் விரைவில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடவேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கைவைத்துள்ளனர்