தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் படுத்துக்கொண்ட சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் - Erode District News

ஈரோடு: திம்பம் மலைப் பாதையில் நடுரோட்டில் சிறுத்தை ஒன்று படுத்துக்கொண்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நடுரோட்டில் சிறுத்தை
நடுரோட்டில் சிறுத்தை

By

Published : Jul 4, 2020, 10:59 PM IST

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப் பாதையில், 27ஆவது வளைவு பாதை மலைச்சரிவில் இருந்து சிறுத்தை ஒன்று திடீரென நடுரோட்டுக்கு வந்தது. பின்னர் அவ்வழியாகச் சென்ற வாகனங்களை கண்டுகொள்ளாமல் நடுரோட்டில் படுத்துக்கொண்டது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், பட்டப்பகலில் சிறுத்தையை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்து போய் நின்றனர்.

அதன் பின்னர் கார் ஓட்டுநர் ஒருவர் தனது காரை இயக்கினார். இதைப் பார்த்த சிறுத்தை மலையில் ஏறிச் சென்றது. பின் இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், சாலையில் எச்சரிக்கையாக செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:தரமற்ற விதையால் விளைந்த கரோனா தக்காளி - விற்பனையாகாமல் விவசாயி தவிப்பு

ABOUT THE AUTHOR

...view details