ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மேட்டூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை தென்பட்டது. இதையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக திலகவதி என்பவரது தோட்டத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி கூண்டு வைத்தனர். இருப்பினும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் அப்பகுதியில் உள்ள 6 ஆடுகளை அடித்துக் கொன்றது.
சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்! - சிறுத்தை
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டங்களில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க ஜல்லியூர் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வனத்துறையினர் ஜல்லியூர் பகுதியில் உள்ள பழனிச்சாமி தோட்டத்தில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ள பகுதியில் கூண்டு வைத்தனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க மூன்று இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தியுள்ளனர். நீண்ட நாட்களாக கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வரும் சிறுத்தை ஜல்லியூரில் வைக்கப்பட்டுள்ள கூண்டில் சிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:ஏலம் கேட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்!