தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி விடுதிக்குள் புகுந்த சிறுத்தை: தேடுதல் வேட்டையில் வனத்துறை! - சிறுத்தை

ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக எல்லையான சாம்ராஜ் நகரிலுள்ள மருத்துவக் கல்லூரி தங்கும் விடுதிக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கல்லூரி விடுதிக்குள் புகுந்த சிறுத்தை
கல்லூரி விடுதிக்குள் புகுந்த சிறுத்தை

By

Published : Jan 7, 2021, 2:12 PM IST

தமிழ்நாடு-கர்நாடக எல்லையான சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து 4 கி.மீ., தூரத்தில் சாம்ராஜ் நகர் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த விடுதியில், மருத்துவ மாணவர்களும், பேராசிரியர்களும் தங்கியுள்ளனர்.

குண்டல்பேட் பந்திப்பூர வனத்தையொட்டியுள்ள எடபெட்டா வனத்திலிருந்து வழி தவறி வந்த சிறுத்தை ஒன்று சாம்ராஜ் நகர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புகுந்தது.

விடுதிக்குள் புகுந்த சிறுத்தை மாணவிகள் தங்கும் அறையின் மேல்மாடிக்குச் சென்றது. அப்போது, விலங்கின் உறுமல் சத்தம் கேட்ட மாணவிகள் கண்காணிப்புக் கேமரா வைக்கப்பட்டுள்ள அறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தேடுதல் வேட்டையில் வனத்துறை:

அங்குள்ள கண்காணிப்புக் கேமாராவில் பார்த்த கல்லூரி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, விடுதியிலுள்ள மாணவர்கள், ஆசியர்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறத்தப்பட்டது.

கல்லூரி விடுதிக்குள் புகுந்த சிறுத்தை

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை தேடினர். ஆனால், எங்கு தேடி பார்த்தாலும் சிறுத்தையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அதிகப்படியான வன அலுவலர்களை வரவழைத்து, தற்போது சிறுத்தையை தேடும் பணி நடந்துவருகிறது.

இதையும் படிங்க: சிறுத்தைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 2 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details