ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித்தொழிலாளியான இவர் ஐந்து ஆடுகளை வளர்த்து வருகிறார். சுப்பிரமணி வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவிட்டு மாலையில் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் பின்புறம் கொட்டகையில் அடைத்தார்.
ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - ஆடுகள் பலி
ஈரோடு: ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஆடுகளை அடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஆடுகள் மிரட்சியுடன் கத்தும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் எழுந்து பார்த்தபோது சிறுத்தை ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை வேட்டையாடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கிராம மக்கள் சத்தம்போட்டதால் சிறுத்தை ஒரு ஆட்டை தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
ஆட்டுப்பட்டிக்குள் 2 ஆடுகள் இறந்து கிடந்தன. கிராமத்திற்குள் சிறுத்தை நடமாடிய தகவலறிந்த பசுவபாளையம் கிராம மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.