ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குற்றவியல் நடைமுறைகள், வன உயிரின குற்றத் தடையங்கள் பற்றி ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆசனூர் வனகோட்டம் அலுவலகத்தில் நீதித்துறை நடுவர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
வனக்குற்றங்களை கையாளும் சட்ட விழிப்புணர்வு முகாம் - வனத்துறையினர் பங்கேற்பு - Tigers Archive
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனக்குற்றங்களை கையாளுவது குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் அரசு வழக்கறிஞர்கள் மீனா, நெளசத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடந்து, வனப்பகுதியில் நடக்கும் குற்றங்களை எப்படி கையாளுவது, வனக்குற்ற வழக்குகளில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள், குற்றம் செய்யபட்ட நபரை எவ்வாறு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என பல்வேறு சட்ட விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி, தலமலை, சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட 10 வனச்சரகத்தை சேர்ந்த வனச்சரகர்கள், வனவர்கள், வனகாப்பாளர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.