தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் சட்டம்  ஒழுங்கு கேள்விக்குறி- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி - தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கேள்விக்குறியாக உள்ளது

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகவும் காவல்துறையினர் ஏவல் துறையாக மாறி உள்ளதாகவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த ஈரோட்டில் பேட்டியின்போது தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கேள்விக்குறியாக உள்ளது - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த பேட்டி
தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கேள்விக்குறியாக உள்ளது - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த பேட்டி

By

Published : May 28, 2022, 11:03 PM IST

Updated : May 29, 2022, 6:02 PM IST

ஈரோடு: நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் “ விவசாயமும் நெசவும் நல்லா இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும். 6 மாவட்டங்களில் நூல் ஆலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் பல கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. காவல்துறையினர் ஏவல் முறையாக மாறி உள்ளனர். மக்களுக்கு பாதுகாப்பான தமிழகமாக மாற வேண்டும். திராவிட மாடலால் மக்களுக்கு என்ன நன்மை உண்டானது. அம்மா உணவகம் பெயர் நெருடலாக இருந்தால் அப்பா உணவகம் என கூட மாற்றிக்கொள்ளுங்கள், மக்களுக்கு நல்ல திட்டமாக இருந்தால் அத்திட்டத்தை தொடர வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கேள்விக்குறியாக உள்ளது - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த பேட்டி

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. இன்று கருணாநிதி சிலை திறப்பை வரவேற்கிறோம். பா.ஜ.க அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலையும் வரவேற்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க :திமுக உட்கட்சி தேர்தல்: எச்சரித்த ஸ்டாலின்...!

Last Updated : May 29, 2022, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details