தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் ரயில்கள் ரத்து - பயணிகள் அவதி! - Erode train commuters

ஈரோடு: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர்.

latest Southern district trains canceled, ஈரோட்டில் ரயில்கள் ரத்து

By

Published : Oct 25, 2019, 2:08 PM IST

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், வெளி மாவட்டத்திலிருந்து ஈரோட்டில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல பயணித்துவருகின்றனர். தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் கட்டணம் மற்றும் வசதிகளுக்காக ரயிலில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ரயில்வே துறையும் பயணிகள் வசதிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்கிவருகின்றனர். ஆனால் இன்று கரூர், திண்டுக்கல் இடையே ரயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

latest Southern district trains cancelled, ஈரோட்டில் ரயில்கள் ரத்து

இதில், திருச்சி பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. கோவை - நெல்லை பயணிகள் ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளை தீபாவளி சமயத்தில் மேற்கொள்வது இடையூறு ஏற்படுத்துவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:'பிகில்' வெறியாட்டம்...! கலவர பூமியான கிருஷ்ணகிரி

ABOUT THE AUTHOR

...view details