தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைக்கிராம பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம் - ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப்பாராட்டு!

சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது. சரியான நேரத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

baby
baby

By

Published : Nov 2, 2022, 8:34 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் பகுதியைச்சேர்ந்த மைலா(21) என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.

சம்பவ இடத்துக்குச்சென்ற ஆம்புலன்ஸ் கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் நோக்கிச்சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் கிட்டாம்பாளையம் சாலையில் சென்றபோது மைலாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையைப் புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் குமரேசன் கர்ப்பிணிக்குப் பிரசவம் பார்த்தார். இதையடுத்து மைலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மலைக்கிராம பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் குமரேசன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வரதராஜனுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமி உயிரிழப்பு: மருத்துவமனையை முற்றுகையிட்ட பெற்றோர்

ABOUT THE AUTHOR

...view details