தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமித்ஷா வருகை பாஜக தொண்டர்களுக்கு ஊக்கம் தரும் - பாஜக தலைவர் எல்.முருகன் - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: அமித்ஷா தமிழ்நாடு வருவது பாஜக தொண்டர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா வருகை பாஜக தொண்டர்களுக்கு ஊக்கம் தரும் என பேட்டி
அமித்ஷா வருகை பாஜக தொண்டர்களுக்கு ஊக்கம் தரும் என பேட்டி

By

Published : Nov 20, 2020, 12:58 PM IST

கடந்த நவம்பர் ஆறாம் தேதி வேல் யாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் திருத்தணியில் தொடங்கினார். தற்போது அவர் தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரையை நடத்தி வருகிறார். இன்று (நவ.20) அவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெற்றிவேல் யாத்திரை கடந்த ஆறாம் தேதி திருத்தணியில் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி டிசம்பர் ஏழாம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும். வேல் யாத்திரையின் நோக்கம் இந்துக் கடவுள்களை அவமதித்த திமுக, கருப்பர் கூட்டம், கயவர்கள் கூட்டங்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமென்பதற்காகத்தான்.

அமித்ஷா வருகை பாஜக தொண்டர்களுக்கு ஊக்கம் தரும் என பேட்டி

இந்த யாத்திரை மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவும், கரோனா போராளிகளை மரியாதை செய்யவும் நடத்தப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவது பாஜக தொண்டர்களுக்கு ஊக்கம் தரும்" என்றார்.

இதையும் படிங்க: மு.க. அழகிரி பாஜகவில் இணைய வந்தால் வரவேற்போம் - எல் முருகன்!

ABOUT THE AUTHOR

...view details